பொறுத்துக்கொள்ள முடியாமல் எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநில மாக ஒன்றிய அரசின் நெருக்கடிக்கு மத்தியிலும் திகழ்கிறது என்றால் அது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகும். நமது மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அனைவரும்ஓற்றுமையுடன் பணியாற்றிவெற்றிபெறஇன்றிலிருந்தே களப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 2வது முறையாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரியணையில் ஏற பணியாற்றுங்கள் என்று பேசினார்.கடந்த 14 வருடங்களில் இல்லாத அளிவிற்கு திமுக ஆட்சியில் 2024-25ம் ஆண்டு 11.19 எனும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருப்பதையடுத்து இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மாபெரும் தொழில்நகரமாக தூத்துக்குடிக்கு மின்வாகன உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் வின்பாஸ்ட் மின்சார கார்தொழிற்சாலையை பல்லாயிரம்கோடி முதலீட்டில் ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பினை அளித்திடும் வகையில் பெற்று தந்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 4 தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்மாவட்டதுணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், சிறுபான்மை அணிதுணைச்செயலாளர்பொன்சீலன்,தொகுதி பொறுப்பாளர்கள் இன்பாரகு, பெருமாள்,கணேசன்மாநகரஅவைத்தலைவர்ஏசுதாஸ்,துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, மதியழகன், குபேர்இளம்பரிதி, சீனிவாசன், அசோக், ராமலட்சுமி, ரமேஷ், ஆபிரகாம், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் அாியணையில் ஏற பணியாற்றுங்கள் செயற்குழுவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!!
8/19/2025
0
திமுகவின் கூட்டணி பலம், தமிழ்நாட்டு மக்கள்ஆதரவைஎடப்பாடிபழனிச்சாமியால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் "ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு பொதுமக்கள் முழு ஆதரவு கொடுத்து திமுகவிற்கு துணையாக நிற்கின்றனர். அதே போல் கூட்டணி கட்சி தலைவர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி ஊர் ஊராக சென்று உலறி கொண்டு திரிகிறார்.
