சேலம்:வளர்ப்பு நாய் கடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

sen reporter
0

சேலத்தில் வளர்ப்பு நாய் காலில் கடித்தும், தடுப்பூசி போடாமல் இருந்த வந்த நபர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வளர்ப்பு நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கொங்கணாபுரத்தை அடுத்துள்ள லகுவம்பாளையத்தில் குப்புசாமி (45) என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். ஒரு மகன் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் மற்ற இருவரும் பள்ளியில் பயின்று வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் ஆசையாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். சமீபகாலமாக அந்த நாய் கோபத்துடன் தெருவில் உள்ளவர்களை கடித்து வந்துள்ளது. மேலும் நாய்க்கு சாப்பாடு வைக்கும் போது குப்புசாமியின் மகன் கையிலும் கடித்துள்ளது.


இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி நாயை அடித்துள்ளார். அப்போது நாய் கோபத்துடன் குப்புசாமியின் காலிலும் கடித்துள்ளது. இதையடுத்து நாய் கடித்த இடத்தில் காயத்திற்கு போட வேண்டிய மருந்தை வைத்து விட்டு மருத்துவரிடம் செல்லாமல் இருந்துள்ளார். ஆனால், குப்புசாமி தனது மகனையும், நாய்க்கடி வாங்கிய சிலரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்து முறையாகஊசிபோடவைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்கள் கழித்து குப்புசாமிக்கு தண்ணீரை பார்த்தால் பயம் வந்துள்ளது. மேலும் மன அழுத்தம் ஏற்பட்டு கோபத்துடன் நடந்து கொண்டுள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதேபோல், சில சமயங்களில் நாயை போல குரைப்பது, சாப்பிடுவது என இருந்து வந்ததை பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடனடியாக குப்புசாமியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குப்புசாமி நாய்க்கடிக்கு தடுப்பூசி போடாமல் விட்டதால் அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து குப்புசாமி அங்கு நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார். இதையடுத்து, குப்புசாமியுடன் வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு தடுப்பூசி போடப்பட்டது.நாய்க்கடித்தால் என்ன செய்ய வேண்டும்நாய் கடித்தவுடன் காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்குச் சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். மேலும், ARV (Anti-Rabies Vaccine) தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ரேபிஸ் நோயை 100 சதவீதம் வர விடாமல் தடுக்க முடியும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top