நிறுவப்பட்ட ஓர் ஆண்டிலிருந்து 29 மாவட்டங்களை சந்தித்து, 839 கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக அந்தந்த ஆய்வு கூட்டங்களிலேயே 661 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 178 கோரிக்கை மனுக்களை அரசுக்கு பரிந்துரையாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இரண்டு மாவட்டங்களை சந்தித்து, அங்குள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உடனடியாக அந்த கூட்டங்களில் தீர்க்கின்ற கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டு, தீர்க்க முடியாக மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.மேலும், நேற்றையதினம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்களை சந்திந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசனை மேற்கொண்டோம். சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகின்ற பொழுது கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சீகர் உள்ளிட்ட தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமல்லாது வேறு மொழியை தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றவர்கள், சௌராஷ்டிரர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், மலையாளிகள் ஆகியோரும் ஆவார்கள். அனைத்து சிறுபான்மையினர்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உயர்ந்த நோக்கமாகும். இவ்வாணையம் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும். இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்தின்படியும், விதிகளின்படியும், சிறுபான்மையினர் பாதுகாப்பு உரிமைகள், நலத்திட்டங்களை வழங்குவது இந்திய அரசியலமைப்பு சாசன சட்டமாகும்.தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சட்டம் 2010ன்படி திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சட்டம் 2020ன்படி சட்டப்பூர்வமான ஆணையம் இந்த ஆணையம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துசிறுபான்மையினர்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா? பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா? அவர்களுக்கு குறைகள் ஏதும் இருக்கின்றதா? உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைவதை உறுதிசெய்வதேஇவ்வாணையமாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் என்னை இந்த ஆணையத்திற்கு நியமனம் செய்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறுபான்மையினர் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். இந்த அரசானது சிறுபான்மையினர் மக்களின் மீது மிகுந்த அக்கறைக் கொண்டு செயல்படுகிற அரசாகும். தூத்துக்குடி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சிறப்பாகசெயல்பட்டுவருகிறது.2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு, ஆதரவற்ற முஸ்லீம் விதவைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல், கைவினைப் பொருட்கள் செய்வதற்கு பயிற்சியளித்தல், ஆதரவற்ற முஸ்லீம்களுக்கு மருத்துவ சோதனை முகாம் நடத்துதல், தையல், பூவேலைப்பாடுகள் உள்ளிட்ட தொழில்கள் கற்றுக் கொண்டு வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 2023 -24 ஆம் ஆண்டில் 265 பயனாளிகளும், 2024-25 ஆம் ஆண்டில் 128 பயனாளிகள் என மொத்தம் ரூ.60 இலட்சம் மதிப்பில் 393 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
2023-24 ஆம் ஆண்டில் இணை மானியமும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசு மானியமாக உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும், ஓய்வூதியத்தொகை, கல்விஉதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்டவை ரூ.3 இலட்சத்திற்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. வ/புவாரியத்தில் பணிபுரிவோர் மற்றும் பணியாளர்களுக்கு இரு சக்கர வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு அலுவலர்கள் மக்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியினை பயன்படுத்த வேண்டும். கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், கிறித்தவ மகளிர் உதவும் சங்கங்கள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் பணிபுரிகின்றவர்களும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் நலத்திட்டங்கள் வழங்கப்படும். கிறித்தவ தேவாலயம் புனரமைப்பு பணிகளுக்கென்று தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சில தேவலாயங்கள் பரிந்துரைக்காக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கல்லறை தோட்டம் குறித்த பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் அனைத்து திட்டங்களையும் சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயனடைய வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, 13 பயனாளிகளுக்கு ரூ. 1 இலட்சத்து 40 ஆயிரத்து 37 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைவழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதன், உதவி ஆட்சியர் (கோவில்பட்டி) ஹீமான்ஷ் மங்கள், துணைத் தலைவர், மாநில சிறுபான்மையினர் ஆணையம் எம்.எம்.அப்துல்குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், உறுப்பினர்கள், மாநில சிறுபான்மையினர் ஆணையம் எ.ஸ்வர்னராஜ், எஸ்.வசந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) ஜா.பென்னட் ஆசிர் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
