இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். பாஜக கூட்டணி சார்பாக, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார்.முன்னதாக 2023 முதல் 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராக அவர் பதவி வந்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இரண்டு முறை இருந்துள்ள அவர், 1998, 1999 மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதனிடையே இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிசுதர்சன்ரெட்டிஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி 1995- ல் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார். அதைத்தொடர்ந்து 2005இல் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்றநீதிபதியாகபணியாற்றினார்.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது உள்ள கூட்டணி கணக்குகளின்படி சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
