கடல் அலையில் சிக்கிய பக்தர்கள் காயம் இதற்கிடையே, பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடிய போது, திடீரென ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி பக்தர்கள் சிலர் இழுத்துச் செல்லப்பட்டனர். ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், அவர்களை துரிதமாக மீட்டனர். அதில், பாலக்காடு பகுதியை சேர்ந்த அனிதா(13) என்ற சிறுமிக்கும், சாத்தூரை சேர்ந்த மாரிசாமி, திண்டிவனத்தை சேர்ந்த கோவிந்தராஜ், சிவகங்கையை சேர்ந்த ராஜேஸ்வரி, கமுதியை சேர்ந்த அன்னலெட்சுமி, மதுரையை சேர்ந்த ஆனந்தவல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாறையில் மோதியாதல்,கால்முறிவுஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, காயமடைந்த நபர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இருந்தாலும் கூட்டம் குறையவில்லை. எனவே, பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுமாறு, கோயில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர் கடும் போக்குவரத்து பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வருவதால், திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் வரிசைகட்டி நிற்கிறது. திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர்முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம்!!!
8/16/2025
0
திருச்செந்தூர் கடலில் திடீரென எழுந்த அலையில்சிக்கியபக்தர்கள் கடலுக்குள் இருந்த பாறையில் மோதியதால் கால் முறிவுஏற்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் கடற்கரையோரம் இருப்பதால், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. அதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகனைக் காண படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.இந்த நிலையில், ஆடி கிருத்திகை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர். அதிகாலை 5 மணிக்கு கோயில் திறப்பதற்குமுன்பே,வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு, குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசனம் செய்தனர்.இதற்காக, அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கியதால், திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் சிறப்பு தரிசன வரிசை என அனைத்திலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையே கோயிலைச் சுற்றி சுமார் 2 கி.மீ தொலைவுக்கு நின்றது.
