தருமபுரி:சுதந்திர தின விழாவில் மாணவர்களுடன் நடனமாடிய குட்டி ரோபோ!!

sen reporter
0

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், குட்டி ரோபோ நடனமாடிய காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் அந்த ரோபோ, விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு கைகொடுத்து வரவேற்றது.நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.மேலும், திறந்தவெளி வாகனத்தில் சென்ற ஆட்சியர், காவல் துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டு, மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசுகளை வழங்கியும் கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே சுவாரஸ்யமாக, 'குட்டி ரோபோ' ஒன்று களமிறங்கியது. அந்த ரோபோ நேரடியாக நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களிடம் சென்று கைகொடுத்து அவர்களை வரவேற்றது. அதுமட்டுமின்றி, சுதந்திர தின விழாவிற்கான பள்ளி மாணவர்கள் நடனமாடியபோது, அந்த ரோபோவும் சேர்ந்து நடனமாடிய காட்சி பார்ப்போரைவெகுவாககவர்ந்தது. முன்னதாக, நிகழ்ச்சியில் நாட்டுப்பற்று நிறைந்த கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவ, மாணவிகள் நடத்தினர். மேலும், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது எப்படி என்பது குறித்து,தீயணைப்பான்உபகரணங்கள் வைத்துவிழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது. தீயணைப்புத் துறை வரலாற்றில் முதன்முறையாக, தருமபுரி தீயணைப்புத் துறையினர் தேசியக் கொடியின் மூவர்ணத்தில்,தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, வர்ண ஜாலத்தை ஏற்படுத்தினர்.அதேபோல, தீயில் நுழைந்து பாதுகாப்புப் பணி செய்வது போன்று சாகச நிகழ்ச்சிகளையும் செய்துஅவர்கள்அசத்தினர்.இந்நிகழ்ச்சியில்,தருமபுரிமாவட்டகாவல்கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top