சென்னை:முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி விழிப்புணர்வு வாகன பேரணியை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்!!!

sen reporter
0

இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்காக, சென்னையில் இருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரை இருசக்கர வாகன பேரணியை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின்தொடங்கிவைத்தார்முதலமைச்சர்கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் மத்திய அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு நடத்தப்படவுள்ளன.மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத்தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலமாக பதிவுகள் நடைபெற்று வருகின்றன.


முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் தலைவரும், சர்வதேச மோட்டார் பந்தய வீராங்கனையுமான நிவேதா ஜெசிக்கா தலைமையில் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்து மீண்டும் 17.8.2025 அன்று காலை புறப்பட்டு, இரவே சென்னை வந்தடைகின்றனர்.முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பசுமைவழிச் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் மேற்கொள்ளும் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா,தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி மற்றும் அரசு உயர்அலுவலர்கள்கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top