மேலும், "பீகாரில் சிறப்பு வாக்களாளர் திருத்தம் என்ற பெயரில், வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றுள்ளது. வாக்குரிமை உள்ள பலரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியின் ஒரு பிரிவாகவே தேர்தல் ஆணையம் மாறியுள்ளது. ஒரு மாநிலத்தில் 4 இடங்களில் வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதை தடுக்க தேர்தல் ஆணையம் முயற்சி செய்யாமல், உண்மையான வாக்காளர்களை நீக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் செய்யும்"என்றும்அவர்தெரிவித்திருந்தார்.இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் கூடியதும் எதிரொலித்தது. மேலும், பீகார் வாக்களாளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதன் காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டன.முன்னதாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், பீகார் வாக்களாளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரியும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு பேரணியாக சென்று புகார் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்!!!
8/08/2025
0
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சேர்க்கப்பட்டவாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டவர்களை விட அதிகம் என ராகுல்காந்திகுற்றஞ்சாட்டியிருந்தார். பீகார்வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெறுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அதுதொடர்பான ஆதாரங்களை நேற்று அவர் வெளியிட்டார்.குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, பெங்களூரு மத்திய தொகுதியில் ஒரு லட்சத்துக்கும்மேற்பட்டவாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக, மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டவர்களை விட அதிகம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.