திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு!!!
8/08/2025
0
திண்டுக்கல்மாவட்டம்ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி வன சரகத்துக்கு உட்பட்ட தருமத்துப்பட்டியில் இருந்து ஆடலூர், பன்றிமலை செல்லும் சாலையில் வன சோதனை சாவடி அருகே சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கன்னிவாடி வனச்சரக அலுவலர் குமரேசன் வனவர்கள் பிரியாராஜா, சபரிநாதன், சைமன் மற்றும் வனக்காப்பாளர்கள். தருமத்துப்பட்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினார்கள். மேலும் அந்த வழியாக பன்றிமலை ஆடலூர் மலை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.