திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தையல் இயந்திரம் வழங்கினார்!!!

sen reporter
0

உங்களுடன்ஸ்டாலின்திட்டமுகாமில்தையல்இயந்திரம்கேட்டுவிண்ணப்பித்தவர்களுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தையல் இயந்திரம் வழங்கினார்.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கைமனுக்களைபெற்றுக் கொண்டார்.இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு கொடுத்த பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ.6690/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் 12 பயனாளிகளுக்கும், ரூ.5018/- மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டி ஒரு பயனாளிக்கும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.மேலும், 24வது IPCA உலக தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவாவில் நடைபெற்றது. இந்த போட்டி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் செஸ் சங்கம் மற்றும் அகில இந்திய செஸ் சம்மேளனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரம் ரோஸ்மேரி சி.பி.எஸ்.சி பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் தருண்சாய் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் செஸ் போட்டியில் பங்கேற்று தங்கம்வென்றுள்ளார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அம்மாணவனை பாராட்டி,வாழ்த்துக்களைதெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top