தேனி: வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முதியவர் உயிரிழப்பு; சிறுத்தையின் நகங்கள் பறிமுதல்!!!

sen reporter
0

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.தேனி மாவட்டம், கம்பம், ஜல்லிக்கட்டுத் தெருவை சேர்ந்தவர் குருநாதன் (67). இவரது வீட்டில் கடந்த 19 ஆம் தேதி இரவு திடீரென நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் குருநாதன் (67) மற்றும் இவரது பேரன்கள் ரித்திஷ் (7), அபினவ் (5) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.வெடிசத்தம் கேட்டு அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக படுகாயமடைந்து கிடந்த குருநாதன் மற்றும் அவரது பேரன்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மேலும், இதுதொடர்பாக கம்பம் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


கம்பம் வடக்கு காவல் துறையினர் குருநாதன் வீட்டில் சோதனை செய்தபோது வனவிலங்கின் நகம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வீட்டிலிருந்த நகங்களை கைப்பற்றிய வனத் துறையினர், அதனை சோதனை செய்ததில் சிறுத்தையின் நகமாக இருக்கலாம் என்று அனுமானித்தனர்.இதையடுத்து, வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக குருநாதன் மீது கம்பம் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வனவிலங்கின் நகங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக வனத்துறை சார்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருநாதன் மற்றும் அவரது பேரன்கள் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில், ஆபத்தான நிலையில் இருந்த குருநாதன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.அதேசமயம், வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிவிபத்து ஏற்பட்டதையும், வனவிலங்கின் நகங்கள் பதுக்கி வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதையும் பார்க்கும்போது வனவிலங்குகளைவேட்டையாடுவதற்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினரும், போலீசாரும் இதுதொடர்பாக மேலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top