கிடுகிடுவெனஉயர்ந்தமீன்கள்விலை அந்த வகையில், சனிக்கிழமையான இன்று ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்க திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். ஆனால், கடற்பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக கரை திரும்பிய படகுகளில் மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால், மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பொதுமக்களின் கூட்டத்தைப் பார்த்த மீனவர்கள் மீன்களின் விலையை அதிரடியாக உயர்த்தி விற்பனை செய்தனர்.அதன்படி, சீலா மீன் ஒரு கிலோ ரூ. 1000 வரையும், விளமீன், ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ.400 முதல் 600 வரையும், சால மீன் ஒரு கூடை ரூ.2 ஆயிரத்து 500 வரையும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல், நண்டு ஒரு கிலோ ரூ. 600 வரையும், தோல் கிளாத்தி, கேரை, சூரை ஆகிய மீன்கள் கிலோ ரூ.180 முதல் 300 வரையும், திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனையானது.மீன்கள் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பாடாலும், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவானாலும், பிடிக்கப்பட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி:மீன் வரத்து குறைவு விலை கிடுகிடுவென உயர்வு மீனவர்கள் மகிழ்ச்சி!!!
8/23/2025
0
மீனவரத்து குறைவு காரணமாக, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும்,விலையைபொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ் கடலில் தங்கி, மீன் பிடித்து சனிக்கிழமை அதிகாலை கரைக்கு திரும்புவது வழக்கம். அவ்வாறு நாட்டுப்படகு மற்றும் ஃபைபர் படகுகளில் சென்ற மீனவர்கள் அதிக அளவில் மீன்களை கொண்டு வருவது வழக்கம். இதனால், வார இறுதி நாட்களில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகம் காணப்படும்.
