மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில், போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த இரண்டு நபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்த போது, மொத்தம் 1,480 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇதையடுத்து, சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மன்சூர் பாஷா மற்றும் கலீல் என்ற இருவரும்கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் போதை மாத்திரைகளை யாருக்காக மற்றும் எதற்காக கடத்தி வந்துள்ளனர்? என்பதற்கான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.கைது செய்யப்பட்ட இருவரையும், பறிமுதல் செய்யப்பட்டபோதைமாத்திரைகளையும் அரக்கோணம் கலால் போலீசாரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். கலால் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற போதைப் பொருட்கள் கடத்தலை முற்றிலுமாக அடியோடு ஒழிக்க காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கை குறித்து காவல்துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ரயில்வே போலீசாரின் தரப்பில் கூறப்பட்டது இதுகுறித்து ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் (அரக்கோணம் பிரிவு) கூறுகையில், "போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் கடத்தல் தொடர்பான தகவல்கள் அடிக்கடி கிடைத்து வருகின்றன. குறிப்பாக ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து மூலம் குற்றவாளிகள் பயணிகளை போல நடித்துக்கொண்டு இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.அரக்கோணம் வழியாக செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 1,480 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது காவல்துறையின் தொடர்ந்து மேற்கொண்டு வரும் புலனாய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு முக்கிய முன்னேற்றம்" என்றார்.
வேலூர்:அரக்கோணம் ரயிலில் கடத்தப்பட்ட 1,480 போதை மாத்திரைகள் பறிமுதல் இருவர் கைது !!!
9/15/2025
0
ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து மூலம் பயணிகளை போல குற்றவாளிகள் நடித்துக்கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.மும்பையில் இருந்து சென்னை வந்த ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் அதனை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வழியாக போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் கடத்தப்படுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அதிரடி சோதனையொன்று நடத்தப்பட்டு, பெருந்தொகையான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
