சென்னை:பேரறிஞர் அண்ணா பிறந்த தினம் முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!!!

sen reporter
0

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், பேரறிஞருமான அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது. முதல்வர் உறுதிமொழியை கூற திமுக நிர்வாகிகள் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.அதில், 'ஒரணி தமிழ்நாட்டில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தையும் சேர்த்து தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும்தொகுதிமறுவரையறையை எதிராக போராடுவேன், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழக வாக்காளர்களின் உரிமையை பறிக்கு SIR-யை எதிராக நிற்பேன், இளைஞர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து நிற்பேன், மாணவர்களின் உரிய கல்வி நிதிக்காக போராடுவேன்'போன்றஉறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.மேலும் 'தமிழ் மொழி, பண்பாட்டு பெருமைக்கு எதிரான பாகுப்பாட்டைஎதிர்த்துபோராடுவேன்,பெண்கள்,விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை காக்க நிதிக்காக போராடுவேன், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்' உள்ளிட்ட உறுதிமொழிகளும்வாசிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள, அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே என் நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மேயர் பிரியா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் சென்னையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காலை முதலே மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனால் அண்ணா சாலை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top