புதுக்கோட்டை அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கரும்புறத்தார் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!!
9/19/2025
0
புதுக்கோட்டை அருகே கொன்னையூர் கரும்புறத்தார் சமுதாயத்திற்கு சொந்தமான 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர். புதுக்கோட்டைமாவட்டம்பொன்னமராவதி அருகே உள்ளது கொன்னையூர். இங்கு வசிக்கும் கரும்புறத்தார் சமுதாயத்தினர் தங்களிடம் ஒரு செப்பேடு இருப்பதாக காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பேராசிரியர் வேலாயுதராஜா மற்றும் கரு.ராஜேந்திரன் ஆகியோர் தங்களது குழுவினருடன் கொன்னையூருக்கு நேரில் சென்று அந்த செப்பேட்டை ஆய்வு செய்தனர்.ஆய்வுக்குப் பிறகு செப்பேடு குறித்து பேசிய அவர்கள், “இரண்டு பக்கமும் எழுதப்பட்டுள்ள இந்த செப்பேட்டில் முதல் பக்கம் 43 வரிகள், இரண்டாம் பக்கம் 7 வரிகள் என மொத்தம் 50 வரிகள் இடம் பெற்றுள்ளன. இதில், குறிப்பிடப்படும் ஆண்டு தவறாக உள்ளதால், தமிழ் ஆண்டையும், இந்த செப்பேட்டின் எழுத்தையும் வைத்து இதன் காலம் கி.பி. 1690, அதாவது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருத முடிகிறது.
