வேலூர்:புதிய தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ பங்கேற்பு!!!
9/19/2025
0
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம், பென்னாத்தூர் பேரூராட்சி அடுக்கம்பாறை மோட்டுப்பாளையம் பகுதி புதிய தார் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் பி.அருள்நாதன், பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், அவைத்தலைவர் பன்னீர் செல்வம், மு.பே.செ.காசி, நிர்வாகிகள் ரமேஷ், கோபி, காந்தி, ராஜா, இளையமுருகன், ஒன்றிய நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
