டெல்லிக்குசென்றுகொண்டிருக்கின்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''இந்த தேர்தலில் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறோம்.அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறோம்,"என்றார்.எடப்பாடி பழனிசாமி 200 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெறுவோம் என்று கூறியது குறித்து கேட்கிறீர்கள். அவர் கனவில் மற்றவர்களுக்கு சில தொகுதியைவிட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த வகையில் பரவாயில்லை. ஆனால் அனைத்து கனவுகளும் மெய்ப்படுவதில்லை. நிச்சயமாக இந்த கனவு வெறும் கனவாக தான் போகும்.'' என்று கனிமொழி எம்.பி. கூறிவிட்டு புறப்பட்டார்.
சென்னை:எடப்பாடி பழனிசாமியின் 200 தொகுதி இலக்கு கனவாக தான் போகும் கனிமொழி எம்.பி கருத்து!!!
9/08/2025
0
ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறோம்.எடப்பாடி பழனிசாமிகனவில்மற்றவர்களுக்குசிலதொகுதியைவிட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த வகையில் பரவாயில்லை. ஆனால் அனைத்து கனவுகளும் மெய்ப்படுவதில்லை. நிச்சயமாக இந்த கனவு வெறும் கனவாக தான் போகும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை (செப்.9) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைசேர்ந்தவரும்,மகாராஷ்டிரமாநிலஆளுநருமானசி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இரண்டு தரப்பில் இருந்துவேட்பாளர்கள்போட்டியிடுவதால் நாளை 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த வாக்கு பதிவில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள்.தற்போதைய சூழலில்ஆளும்பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் 293 மற்றும் மாநிலங்களவையில் 130 எம்.பி.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் ''இந்தியா கூட்டணிக்கு'' மக்களவையில் 234 மற்றும் மாநிலங்களவையில் 79 எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தமிழ்நாட்டை சேர்ந்தமக்களவைமற்றும் மாநிலங்களவைஉறுப்பினர்கள்
