வேலூர்:அன்னை தெரசா புகைப்பட கண்காட்சி ஆர்வமுடன் கண்டுகளித்த காட்பாடி மக்கள்!!!

sen reporter
0

அன்னை தெரசாவின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில், அவரது புகைப்படக் கண்காட்சி காட்பாடியில் சிறப்பாக நடைபெற்றது.உலக அளவில் சமூக சேவகியாக அறியப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்பட கண்காட்சி காட்பாடியில் நடைபெற்றது. இதில் இடம்பெற்றிருந்த அவரின் அரிய வகை புகைப்படங்களை பொதுமக்கள் ஆர்வமுடன்கண்டுகளித்தனர். இந்தியாவில் ஏழைகளுக்கு சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் அன்னை தெரசா. இவர் 1910 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26 ஆம் தேதி மாசிடோனியாவின் ஸ்கோப்ஜி நகரத்தில் பிறந்தார். 'அன்பு தான் உனது பலவீனம் என்றால், இவ்வுலகில் நீ தான் மிகப்பெரிய பலசாலி' என்ற வரியை உதித்தவர். பாகுபாடின்றி ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்து உலகப்புகழ்பெற்றார்தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயலாற்றினார். தொடர்ந்து, கடந்த 1950 ஆம் ஆண்டு “மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி (Missionaries of Charity)” என்ற அமைப்பைத் தொடங்கி, பசி மற்றும் நோயால் தவிப்போர்,சாலையோரத்தில் வசிக்கும் புறக்கணிக்கப்பட்டோர் ஆகியோருக்கு உணவு, சிகிச்சை, தங்குமிடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தினார்.

மனித குலத்திற்கு சேவைகள் செய்வதற்காக அதிக விருதுகள் பெற்ற நபராக அன்னை தெரசா திகழ்ந்தார். அவரது சேவைகளை பாராட்டி கடந்த 1962 ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு அவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி சிறப்பித்தது. தொடர்ந்து, அவரது சேவைகள் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டு, 1979 ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளும், அங்கீகாரங்களும் அவருக்கு கிடைத்தது.அன்பு, கருணை, தன்னலம் மறந்த சேவை என்பதே அவரது வாழ்நாள் கொள்கையாக இருந்தது. இப்படி மகத்தான எண்ணம் கொண்ட அன்னை தெரசாவின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில், அவரது புகைப்பட கண்காட்சி காட்பாடியில் நடைபெற்றது. அவரது பிறந்த நாள் (ஆகஸ்ட் 26) மற்றும் அவரது நினைவு தினத்தையொட்டி (செப்டம்பர் 5), நாணயவில் அறிஞரும், அஞ்சல் தலை சேகரிப்பாளருமான தமிழ்வாணன் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.இந்த கண்காட்சியில், அன்னை தெரசா பயன்படுத்திய புனிதப் பொருட்களின் புகைப்படங்கள், அஞ்சல் தலை புகைப்படங்கள், உலக நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள், அவர் செய்த சமூக சேவைகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. புகைப்படங்களோடு இணைந்து அவரது பணிகளை நினைவூட்டும் ஆவணங்களும், மனிதகுலத்திற்காக அவர் செய்த பங்களிப்பையும் விளக்கும் குறிப்புகளும் பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில்காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இந்த கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "அன்னை தெரசா செய்த சேவைகள் எங்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவரின் கருணை மனப்பான்மையை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. இந்த கண்காட்சியின் மூலம் அவர் வாழ்ந்த விதம், சேவை, அவர் பெற்ற அங்கீகாரம் ஆகியவற்றை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்தது. இதுஎங்களுக்குபெரும்ஊக்கமளிக்கிறது. அவரை போன்று நாமும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும்” என்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top