வேலூர்:காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு விசிக மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் அறப்போராட்டம்!!!
9/23/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம். இதுகுறித்த தகவல் அறிந்த விசிக வேலூர் மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்களுடன் அறப்போராட்டம் தொடக்கம். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன்சமரசம்பேசினார். காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சொரக்கால்பட்டில் அருந்ததியின மக்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் 41 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை ஒரு குடும்பத்தினர் அதாவது தசரதன் என்ற 85 வயது முதியவரின் குடும்பத்தினர் கடந்த நான்கு தலைமுறைகளாக அனுபவித்த வருகின்றனர். இந்நிலையில் சல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி-புஷ்பா என்பவரது மகன் அருண் போலியாக பத்திரம் பதிவு செய்து வைத்துக் கொண்டு அருந்ததியின மக்களை விரட்டி அடித்து விட்டு ஜேசிபி உதவியுடன் அவர்களது இடத்தில் இருந்த சுமார் 250க்கும் மேற்பட்ட பச்சை பனை மரங்களை வெட்டி சாய்த்து அதை அருகில் உள்ள கினிற்றில் கொட்டி பெட்ரோல் ஊற்றி எரியூட்டியுள்ளார். ஆனால் பச்சை பன மரங்கள் எரியாமல் கிடந்தல் சம்மதந்த பட்டவர்களை கைது செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
