தூத்துக்குடி: நவராத்திரி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்துக்கள் பலரும், வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர்!!!
9/23/2025
0
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு நவராத்திரி விழா, நேற்று துவங்கியது. அக்.1ம் தேதி சரஸ்வதி பூஜை, 2ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகர் மற்றும்மாவட்டத்தின்பல்வேறுபகுதிகளில் இந்துக்கள் பலரும் வீடுகளில் கொலுவைத்து அலங்கரித்து வருகிறார்கள்.குறிப்பாக சுவாமி சிலைகள், கிருஷ்ண லீலா, கருமாரியம்மன், மீனாட்சி அம்மன், திருப்பதி பிரம்மோற்ஸவ சிலை, அர்த்தநாரீஸ்வரர், சங்கர நாராயணன், அழகர் சுவாமி, தலைவர்கள், தியாகிகள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள், ஆண்டாள், குபேரர் என பல்வேறு விதமான பொம்மைகள் வைத்து தினந்தோறும் பூஜை செய்து வருகின்றனர்.
