புதுச்சேரி:ராக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2025 ஆம் ஆண்டில் சாதனை படைப்பு!!!
9/10/2025
0
புதுச்சேரி ராக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் காரைக்காலில் நடைபெற்ற 29வது புதுச்சேரி மாநில ஹேண்ட்பால் போட்டியில் முதல் பரிசை வென்று தங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இப்போட்டியில்கலந்து கொண்டசாம்பியன்ஷிப்வெற்றியாளர்கள் கோப்பை மற்றும் ரூ.10,000 பணம் ஆகியவற்றை பரிசாகப் பெற்றது. இந்த வெற்றி தங்கள் திறமையான அணியினருக்கு கிடைத்த பெருமை என தெரிவித்துள்ளனர். அம்மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த ஆட்டத்திற்காக பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது கல்லூரி நிர்வாகம். இந்த சாதனைக்காக தொடர்ந்து வழிகாட்டி, ஊக்கமளித்து, ஆதரித்து வந்த உடற்கல்வி இயக்குநர் வீரப்பனுக்கும், உடற்கல்வி இயக்குநர் புவனேஸ்வரிக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார் டாக்டர் விஜயகுமார். குறிப்பாக போட்டியில் வெற்றி பெற்று கோப்பை மற்றும் பதக்கத்தை வென்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சார்பில் கௌரவித்து விருந்தளித்து உபசரித்தது குறிப்பிடத்தக்கது.
