வேலூர்:தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் இயக்குநர் சீமா அகர்வால் தகவல்!!!!

sen reporter
0

 தமிழகத்தில்ஏழுஇடங்களில்புதிய  தீயணைப்புநிலையங்கள்,அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை  எடுத்து வருகிறது என்று தீயணைப்புத் துறை மற்றும்மீட்பு பணிகள் துறை இயக்குனர். சீமா அகர்வால் வேலூரில் பேட்டியளித்தார். வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட தீயணைப்பு நிலையங்களின் வருடாந்திர ஆய்வு கூட்டம்  வேலூர் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்ட தீயணைப்பு துறைஅதிகாரிகள்கலந்து கொண்டனர். இந்தஆய்வுகூட்டத்தில்தீயணைப்புத் துறையில்பயன்படுத்தப்படும் வாகனங்கள், கருவிகள், அலுவலக கோப்புகள், கட்டட வசதிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமா அகர்வால், வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டும் வருகிறது.வரும் இரண்டு மாதங்களுக்கு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் தீயணைப்பு துறையினரும் இணைந்து பேரிடர் காலங்களில் மீட்பது தொடர்பான தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கேட்கும் பல்வேறு தீயணைப்பு உபகரணம் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாளுக்கு நாள் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப நவீன கருவிகள் தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் அடுக்குமாடி கட்டிடங்களில் போதுமான தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிறகே கட்டிட அனுமதி தீயணைப்பு துறையால் வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களில் வெடி விபத்துக்கும் தீ விபத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது.இருந்த போதிலும் தீ விபத்து மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தீயை அணைப்பதற்கும் தீயணைப்பு துறையினர் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுவருகிறது.மேலும் தீயணைப்புதுறையில்உள்ள600காலிப்பணியிடங்கள்நிரப்பப்பட்டுள்ளது மீதமுள்ள காலி பணியிடங்கள் நிரப்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் சொன்னார்.பின்னார் ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி (ராணிப்பேட்டை கேம்பஸ்) மருத்துவமனையில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீ தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்த ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top