மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு தொழில் துறை இந்த அளவுக்கு வேகமாக வளர துடிப்பான, இளமையான அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தான் காரணம். அமைச்சர் உள்ளிட்டோருக்கு டார்கெட் கொடுத்துள்ளேன். திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்பதை இலக்காக நிர்ணயித்தோம். அதற்கான கட்டமைப்பை சிறப்பான முறையில் மேம்படுத்தி, தொழில் செய்யும் சூழலை உருவாக்கி வருகிறோம்.திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 75% பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 4 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளோம். அந்த வகையில், நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 விழுக்காட்டை தாண்டியுள்ளது” என்றார்.
தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் எல்காட் நிறுவனம் சார்பில் ரூ.1,100 கோடி மதிப்பில் புதிய ஐடி தொழில் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். மதிய உணவை முடித்து விட்டு அங்கிருந்து நேராக கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தில் மாலை 3 மணிக்கு புதிய தொழிற்சாலையைதுவக்கிவைத்தார்.அதன் பின் மீண்டும் ஓசூர் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு மாலை 6 மணிக்கு சென்றடைகிறார். மேலும், நாளை கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், மருமகன் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (81) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குநாளைவெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஒருநாள்பயணத்தை ரத்து செய்துள்ளார்.
