போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும்முயற்சியில்காவலர்களுக்கும்,போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக, அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.மேலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னதாக, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கடந்த மாதம் 13 நாட்கள் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கனவே நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், நேற்று மாநகராட்சி அலுவலகம் பின் புறம் உண்ணாவிரதப் போராட்டம்மேற்கொள்ளமுயன்றனர். மேலும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.
சென்னை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது!!!
9/11/2025
0
சென்னைமாவட்டஆட்சியர்அலுவலகம் எதிரே அம்பேத்கர் சிலை முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர்கைதுசெய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அம்பேத்கர் சிலை முன்பு கையில் மனுவுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர்கைதுசெய்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அம்பேத்கர் சிலை முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 10-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.அப்போது பேசிய தூய்மைப் பணியாளர்கள், “பல நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசுக்கு எங்கள் குரல் கேட்கவில்லை. அரசு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாததால் தான் நாங்கள் இவ்வாறு தொடர் போராட்டம் நடத்துகிறோம்.இன்று சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தோம். ஆனால், காவல் துறை மனு கொடுக்க கூட அனுமதி தரவில்லை. எங்களுடைய கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதை அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம்” என கூறினர்.
