கோவை தனியார் மருத்துவமனை சார்பில் இதயக் குறைபாடுகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் மாரத்தான் செப்.28ம் தேதி நடைபெறுகிறது!!!

sen reporter
0

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நடத்தும் இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், செப்.28ம் தேதி "ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற விழிப்புணர்வு மாரத்தானை நடத்துகிறது. இதற்கான டி-சர்ட் மற்றும் பதக்கத்தின் வெளியீட்டு நிகழ்வுநடைபெற்றது.இந்நிகழ்ச்சியின் போது மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசுவாமி கூறுகையில், ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் - 2024 இன் 2வது பதிப்பில், 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகள், இந்த மரத்தானில் கிடைத்த நிதி மூலம் பயனடைந்தனர். மேலும், டாக்டர். ரகுபதி வேலுசுவாமி கூறுகையில், கடந்த 2 பதிப்புகளில் போலவே இம்முறையும், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகள், இந்த மரத்தானில் கலந்து கொள்ள உள்ளனர்.

செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த இயலும், இதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். எனவேதான், பொதுமக்கள் அனைவரும் குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக, செப்.28ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகாலை5.30மணிக்குகோவை,பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான். நடைபெறவுள்ளது. 3 வெவ்வேறு பிரிவுகளில் மரத்தான் நடைபெற உள்ளது. 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் 5 கிமீ ஓட்டம் உள்ளது. 10 கி.மீ. இதில் 18 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம். மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஒரு பிரிவாக இதில் கலந்து கொள்ளலாம். 5 மற்றும் 10 கிமீ பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்க பரிசு தொகைரூ.75,000அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.நிகழ்ச்சியில்ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசுவாமி, குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகுமார், குழந்தைகள் இருதய மருத்துவர் கல்யாண சுந்தரம், குழந்தைகள் ரத்தவியல் மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மருத்துவர் அஜீதா, குழந்தைகள் இருதய மருத்துவர் சன்ச்சிதா ஹரிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top