கோவை:ஜெம் கேன்சர் சென்டர் சார்பில் ரோஸ் தினம் கொண்டாட்டம் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச மார்பகப் பரிசோதனை திட்டம் துவங்கப்பட்டது!!!
9/21/2025
0
கோவை ஜெம் கேன்சர் சென்டர் முதல் ரோஸ் தின நிகழ்ச்சியை அன்று நடத்தியது. இந்த நிகழ்வில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களும், சிகிச்சை முடித்தவர்களும் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கையும், ஊக்கத்தையும் வழங்கினர்.இந்த நிகழ்ச்சிக்குஜெம்மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு தலைமை வகித்தார்.ஜெம் மருத்துவமனைகளின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், ஜெயா பழனிவேலு மற்றும் பிரபா பிரவீன் ராஜ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஜெம் கேன்சர் சென்டரில், 40 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு இலவச மார்பகப் பரிசோதனை (Free mammogram campaign) திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், புற்றுநோயாளிகளுக்கான பிரத்யேக ஆன்கோ-சப்போர்ட் குழுவையும் அவர் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெம் மருத்துவமனைகளின் தலைவர்டாக்டர்பழனிவேலு,புற்று நோயைஒருசிகிச்சையளிக்கக்கூடிய நோயாகக் கருத வேண்டுமே தவிர, ஆபத்தானதாக நினைக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். மக்கள் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டால், அது சமூகத்தில் புற்றுநோயின் சுமையைக் குறைக்கும்என்றும்கூறினார்.நிகழ்ச்சியின் முடிவில், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சிவகுமார் நன்றியுரை ஆற்றினார்.
