பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவிகள் 3 பேர் விபரீத முடுவு எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!!
9/22/2025
0
பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவிகள் 3 பேர் விபரீத முடுவு எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.விசாரணையில், பொள்ளாச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று (செப்.22) பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.இதில் மயக்கமடைந்த மாணவிகளை மீட்டு ஆசிரியர்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்கிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இச்சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
