அரசு மற்றும் தனியார் துறைகளில் 1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் வாயிலாக உயர்கல்வி படிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகள், மொத்தம் 404 திட்டங்களாக செயல்பாட்டில் உள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன.மேலும் மத்திய அரசின் உரிய நிதி பங்களிப்புக்காக 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் அரசால் நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ள முடியாதவையாக உள்ளன," என்றார்.மேலும், இவற்றில் குறிப்பாக, 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் அடையாறு, பக்கிங்காம், கூவம் உள்ளிட்ட நதிகளில் கலக்கும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்ற வருகின்றன. வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இவை தவிர, தேர்தல் வாக்குறுதிகளாக குறிப்பிடப்படாத பல்வேறு திட்டங்களும் மாநிலஅரசால்நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பாக 10,187 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உட்பட பல்வேறு திட்டங்கள் வாக்குறுதிகளாக கொடுக்கப்படாமல்நிறைவேற்றப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், "மத்திய அரசின் போதிய நிதி பங்களிப்பு இல்லாததாலும், ஒவ்வொரு திட்டத்திலும் நிதிப்பகிர்வு குறைந்து கொண்டே வருவதாலும் மாநில அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உள்நாட்டு உற்பத்தி திறன் மத்திய அரசின் தரவுகள்படி இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.தமிழ்நாட்டின் GDP என்பது மாயமானது என உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டபோது, ”எடப்பாடி பழனிசாமி மாய உலகத்தில் இருக்கிறார். அவர் கூட்டணியில் இருக்கும் பாஜக அரசுத் தான் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் பட்டியலை அளித்தது. மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் சமூகத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. பெண்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை இந்த திட்டங்கள் கொடுத்துள்ளன" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதலளித்தார்.
