அதில், ரூ.10 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட பல ஆவணங்கள் இருந்துள்ளன. இதனைப் பார்த்த பிரியதர்ஷினி தனது தாய் மலர்க்கொடி உதவியுடன், உரியவரிடம் பர்ஸை ஒப்படைக்க ஆவணங்களில் உள்ள முகவரிகளுக்கு சென்று பார்த்தார். ஆனால், விஜய் குடும்பத்தினர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக இந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, பிரியதர்ஷனியும் அவரது தாயாரும் குடும்ப நண்பர் சரவணன் என்பவர் உதவியுடன், கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். முன்னதாக, விஜயும் தனது பர்ஸ் காணவில்லை என புகார் தெரிவித்த நிலையில், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்திற்குவரவழைத்தனர்.இதில், மாணவி பிரியதர்ஷனி கொண்டு வந்தது விஜய் பர்ஸ் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பிரியதர்ஷினி மற்றும் அவரது தாயார் ஆகியோர் காவல் உதவி ஆய்வாளர் சுபாஷ் முன்னிலையில், விஜய்யிடம் பர்ஸ், ரொக்க பணம், ஏடிஎம் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை நேரடியாக ஒப்படைத்தனர். இதனால், அவர் மகிழ்ச்சி அடைந்தார். சாலையில் கிடந்த பர்ஸை ஒப்படைத்த மாணவி பிரியதர்ஷினி மற்றும் அவரது தாய் மலர்க்கொடியின் நேர்மையைப் பாராட்டி போலீசார் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
கும்பகோணம்:சாலையில் பணத்துடன் கிடந்த பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த மாணவி பாராட்டிய போலீசார்!!!
9/02/2025
0
சாலையில்கிடந்தபர்ஸைபோலீசாரிடம் ஒப்படைத்தமாணவிபிரியதர்ஷினியின் நேர்மையை பாராட்டிய போலீசார் அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.கும்பகோணம் அருகே ரூ.10 ஆயிரம் பணத்துடன் சாலையில் கிடந்த பர்ஸை பள்ளி மாணவி ஒருவர் போலீசார் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்தார்.கும்பகோணம் பாரத் நகரை சேர்ந்தவர் விஜய் (37), வியாபாரம் செய்து வருகிறார். இவரது தாயார் வசந்தி (58). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் விஜய் அவரை சிகிச்சைக்காக செட்டி மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து பணம் கொடுப்பதற்கு விஜய் பர்ஸை எடுக்கும் போது தனது பாக்கெட்டில் பர்ஸ் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தொடர்ந்து, அந்த பகுதியில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே, கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கு படிக்கும் மாணவி பிரியதர்ஷினி (15) வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது சாலையில் பர்ஸ் கிடைந்ததை பார்த்து அதனை எடுத்துள்ளார்.
