அப்போது, போக்குவரத்துத் துறை அலுவலர்களை நேரில் அழைத்து, அவர்களுடன் ஆம்னி பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் ஏறி அதில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பான்களை (ஹாரன்கள்) சோதனை செய்தார். இதில், அனுமதிக்கப்பட்ட அளவில் ஒலி எழுப்பப்படுகிறதா? என்பதை 'நவீன ஒலி அளவீட்டு கருவி' மூலம் ஆய்வு செய்தார். அப்போது சில வாகனங்களில் 106, 107, 108 டெசிபல் அளவில் ஒலிப்பான்கள் அமைக்கப்பட்டதை கண்டறிந்த அமைச்சர், உடனடியாக அவற்றை அகற்ற அறிவுறுத்தியதோடு, ஒலி மாசு ஏற்படுத்தியதற்காக அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.சுற்றுசுழல் மாசு பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது என்ன ஒலி மாசு? மனிதர்களின் செவித்திறன் 20 ஹெர்ட்ஸ் (Hz) முதல் 20,000 ஹெர்ட்ஸ் (Hz) வரை உள்ள ஒலிகளை உணரக் கூடியவை. ஆனால், 80 முதல் 110 டெசிபல் அளவுக்கு அதிகமான ஒலியை எழுப்பும் போது, நமதுசெவித்திறன்பாதிக்கப்படுகிறது.ஆனால், பல வாகனங்கள் மேற்குறிப்பிட்ட டெசிபலுக்கும் அதிகமாக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆம்னி பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் இவ்வாறு அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றன. இதனால் வயதானவர்கள் மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் செல்லும் போது கனரக வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலிஅவர்களைஅதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.இது, விபத்துகளுக்கும் வழி வகுக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற ஹாரன்களால் விபத்துகள்ஏற்படுவதுதொடர்கதையாக உள்ளது. இதற்காக, அரசு நேரடியாக களமிறங்கி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. கனரக வாகனங்கள் 90 டெசிபலுக்கு மேல் ஒலிப்பான் பொருத்தக்கூடாது என்பது விதிமுறை.ஒலி மாசு கட்டுபாடுகளை கனரகவாகனங்கள்பின்பற்றுகின்றவா என்பதை நவீன ஒலி அளவீட்டு கருவி கொண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் 255 புதிய ஒலி அளவிடும் கருவிகளை வழங்கி சோதனை மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையில், நேற்று அமைச்சரே நேரடியாக ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அரியலூர்:அதிக சப்தத்துடன் ஒலித்த ஹாரன்கள் நேரடியாக களமிறங்கி லாரி பஸ்களை நிறுத்தி மடக்கிய அமைச்சர்!!!
9/10/2025
0
90 டெசிபலுக்கும் அதிகமான அளவில் ஒலிப்பான்களை கொண்ட லாரி மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தார் அமைச்சர் சிவசங்கர்.அதிக அளவில் ஒலி எழுப்பும் ஹாரன்களை கொண்டு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளையும், லாரிகளையும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரடியாக மடக்கிப் பிடித்து அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சேலத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது சொந்த ஊரான அரியலூரில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சிமாவட்டம்உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடி அருகே காரில் இருந்து இறங்கிய அமைச்சர், அவ்வழியே சென்று கொண்டிருந்த கனரக வாகனங்களை திடீரென நிறுத்தி ஆய்வு மேற்கொண்டார்.
