திருநெல்வேலி;சிறுமிக்கு பாலியல் தொல்லை தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!!!

sen reporter
0

தென்னிமலையைசேர்ந்தகோடீஸ்வரன் (38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த பாலியல் தாக்குதலில்அந்தசிறுமியின்தாயும் உடந்தையாகஇருந்துள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாங்குநேரி அனைத்துமகளிர்காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளான கோடீஸ்வரன்(38) மற்றும் மல்காமால்(35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் 2 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தீரப்பு வழங்கினார்.இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா (தற்சமயம் தூத்துக்குடி மாவட்டம்), சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.சிலம்பரசன்பாராட்டினார். திருநெல்வேலி காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 16 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 17 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 ேபருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு,அவர்களுக்கெதிராககுற்றங்களில்ஈடுபடும்குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top