மதிமுகவை அழிக்க கடந்த 32 ஆண்டுகளாக சிலர் முயற்சித்தார்கள். அது அப்போது முடியவில்லை, இப்போதும் முடியவில்லை, எப்போதும் முடியாது. உங்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என ஆர்.எஸ்.எஸ் பிரகடனம் செய்துள்ளது.திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாமல், அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் மத்திய அரசு. கட்சியின் கட்டமைப்பை வலுபடுத்த மதிமுகவினர், திமுகவோடு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.திமுக தனி பெரும்பான்மைபெறும்வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக தனி பெரும்பான்மை பெறும். மீண்டும் மு.க.ஸ்டாலின் மகுடம் ஏந்துவார். பலரின் தியாகத்தால் உருவாகி வேரூன்றி வளர்ந்துள்ள திராவிட இயக்கத்தை ஒரு போதும் நெருங்க முடியாது. அமித்ஷாவின் கனவு பகல் கனவாகும். அது ஒரு போதும் பலிக்காது.
திருச்சி:திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளுக்கு மத்திய அரசே காரணம்! வைகோ விமர்சனம்!!!
9/16/2025
0
மதிமுகவினர் திமுகவோடு பக்குவமாக நடந்துகொள்ளவேண்டும்எனதிருச்சியில்நடைபெற்றமாநாட்டில்அக்கட்சியினர்பொதுச்செயலாளர்வைகோதெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் மத்திய அரசுதான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் எம்பி துரை வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும்தொண்டர்கள்கலந்துகொண்டனர்.இந்த மாநாட்டில், சிறப்பு வாக்காளர் திருத்த விவகாரத்தில் பா.ஜ.கவின் சதியை முறியடிக்க வேண்டும், மக்கள் பிரதிநிதிகள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது. பின்னர் மேடையில் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது, “தமிழகத்தின் வளர்ச்சிக்கு அண்ணாவின் சித்தாந்தம் தான் காரணம். இருமொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது மத்திய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடித்தளத்தை தகர்த்துவிட்டு, பன்முக கலாச்சாரத்தை அகற்ற பாஜக முயல்கிறது. இந்தி திணிப்பு மூலம் தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
