திமுக முப்பெரும் விழாவிற்காக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 17ஆம் தேதி திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10:30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து, சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்குவருகைதரஉள்ளார். முதலமைச்சர் நேரடியாக விழா மேடைக்கு வருகை தருவதற்காக, கோடங்கிப்பட்டியில் இருந்து விழா மேடை வரை தனி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையை ஒட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூர்; திமுக முப்பெரும் விழாவிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 17 ஆம் தேதி திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்!!!
9/16/2025
0
திமுக முப்பெரும் விழாவிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 17 ஆம் தேதி திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10:30 மணிக்கு வருகிறார்.திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் நாளைமுப்பெரும்விழாநடைபெறுகிறது இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை கரூர் சட்டப் பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி அருகில் 50 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமான மேடை இரவு பகலாக அமைக்கப்பட்டு வருகிறது.விழா நடைபெறும் இடத்திற்கு திருச்சியில் இருந்து கே.என்.நேரு, ஈரோட்டில் இருந்து முத்துசாமி, திண்டுக்கலில் இருந்து ஐ.பெரியசாமி, சக்கரபாணி, நாமக்கல் மாவட்டத்திலிருந்து மதிவாணன் போன்ற அமைச்சர்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.முப்பெரும் விழாவில், திமுக சார்பில் தந்தை பெரியார் விருது மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கும், அறிஞர் அண்ணா விருது பாளையங்கோட்டை சுப.சீதாராமனுக்கும், கலைஞர் விருது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோ.மா. ராமச்சந்திரனுக்கும், பேராசிரியர் விருது சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்திற்கும், மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது சமீபத்தில் மறைந்த குளித்தலை சிவராமனுக்கும் வழங்கப்பட உள்ளது.திமுக முப்பெரும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆர் ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். நிறைவாக, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.கரூர்,திருச்சி நெடுஞ்சாலையில்விழாநடைபெறுவதால்,செப்டம்பர்17ஆம்தேதிமட்டும்,அனைத்துவாகனங்களும்மாற்றுப்பாதையில்செல்லபோக்குவரத்துமாற்றம்செய்யப்பட்டுள்ளது. இதனால் கரூரில் இருந்து திண்டுக்கல், மதுரை செல்லும் வாகனங்கள், மாயனூர் டோல்கேட் அடுத்த உப்பிடமங்கலம் பைபாஸ் பிரிவு சாலை வழியாக, ஜெகதாபி சென்று வெள்ளியணைவழியாகஅரவக்குறிச்சி பைபாஸ்வழியாகசெல்லபோக்குவரத்துமாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.இதேபோல, ஈரோடு மற்றும் கோவை பகுதிகளில் இருந்து கரூர் வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள் மயில் குறுக்கு சாலை வேலாயுதம்பாளையம் ரவுண்டானா வாங்கல் வழியாக மோகனூர் காவிரி ஆற்றுப் பாலத்தை கடந்துகாட்டுப்புத்தூர்முசிறிவழியாக திருச்சிசெல்லும்வகையில்போக்குவரத்துமாற்றம்செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும், புதிதாக போட்டியிடும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தனது முழுமையான தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
