குறிப்பாக, வண்ணந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட தோப்பூர்-கொள்ளைமேடு, கத்தேரிகுப்பம்-காளியம்மன்பட்டி,மடையாப்பட்டுகெங்கசாணிகுப்பம்,மடிகம்பகுதிகளில் பாதிப்புஏற்பட்டுள்ளது. மேலும், மேம்பாலம் கட்டுவதற்காக ஒடுகத்தூர்-நேமந்தபுரம் செல்லும் ஆற்றின் குறுக்கே இருந்த தரை பாலம் இடித்து அகற்றப்பட்டதால், அந்த பகுதியில் இருந்த மண் சாலையும் வெள்ளத்தில் மூழ்கி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அத்திகுப்பம், நேமந்தபுரம், ஓட்டேரிபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் ஒடுகத்தூருக்கு செல்ல சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலங்களை கடக்க வேண்டாம் என வருவாய் துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆற்றங்கரையோரமோ அல்லது ஆற்றை கடக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குளம், குட்டை, கிணறுகளுக்கு செல்லாமல் இருக்கவும், குழந்தைகள் ஆற்றில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும்,கால்நடைகள்பாதுகாப்பான இடங்களில்கட்டிவைக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆற்றில் மணல் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் முன்னெச்சரிக்கை நிலை உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆற்றங்கரை ஓரம் சென்று புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
