முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,57,316 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவற்றில் 17,207 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 கோடியே 81 லட்சம் ரூபாய் சிறப்பு சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.சுய உதவிக் குழுக்களின்தடையற்றசெயல்பாடுகளுக்காக இன்று வரை மகளிர் சுய உதவுக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வங்கிக் கடன்இணைப்பாகவழங்கப்பட்டுள்ளது. மாநில அரசே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் நிதி வழங்குவதால் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பத்து கோடி ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம். எனவே, இதனை மத்திய அரசு ரூ.10 கோடி ரூபாயாக உயர்த்திட இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்து அனுப்பப்படும்.
இதுவரை 3,397 குழந்தைகள் நேய மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. 6,390 குழந்தைகள் மையங்களை திறன்மிகு குழந்தைகள் மையமாக தரம் உயர்த்தி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 5,582 மையங்கள் தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதே போல், மத்திய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் என இக்குழு மூலமாகவே வலியுறுத்துகிறோம்” என்றார்.முன்னதாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஈக்வினிக்ஸ் (Equinix) நிறுவனம் சிப்காட் சிறுசேரி தொழில் நுட்பப் பூங்காவில் ரூ.574 கோடி முதலீட்டில் 47 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைத்துள்ள தரவு மையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.அதே போல், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
