தூத்துக்குடி: மாவட்டத்தில் பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் ன் கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப் பணி நடைபெற்றது!!!!
9/20/2025
0
சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம்மூன்றாவதுசனிக்கிழமைஉலகம்முழுவதும்கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை செயல்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியைசுத்தமாகவும்,பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் நோக்கத்துடன் பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் தூய்மைப்பணிஇன்றுநடைபெற்றது. கடற்கரை தூய்மைப் பணியினை சாரண, சாரணிய இயக்கச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன் பால், மாநில உதவி ஆணையரும், மாவட்டப் பயிற்சி ஆணையருமான ஆ.ஜெயாசண்முகம், மாவட்ட சாரணஆணையர் பி.சரவணன், விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தனர்.மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்காசாரண,சாரணியர்களின் தூய்மைப் பணியினை பார்வையிட்டார்.நிறைவாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கடற்கரை ஓரம் மரங்களை நட்டு வைத்து சாரண, சாரணியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிற்கு அருகிலும் மரங்களை நட்டு வைத்து பாதுகாப்பதன் மூலம் இயற்கையை நல்ல பாதுகாக்க முடியும் என்று கூறினார்.கடற்கரை தூய்மைப் பணியில் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளி, புனித லசால் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து சாரண, சாரணியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
