இந்நிலையில், இந்த HONC GAS எரிபொருள் தயாரிப்பு நிறுவனம், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த கணியாம் முருகம்பாளையம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அடுப்பை விற்பனை செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லைஎனத்தெரிகிறது. கூறப்படும் சிறப்பம்சங்கள்:தண்ணீரில் இருந்தே ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் பிரித்தெடுக்கப்படுகிறது.100 சதவீதம் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.1 லிட்டர் தண்ணீர் மூலம் ஒரு மாத காலத்திற்கு அடுப்பை எரிய வைக்க முடியும்.18 கிலோவாட் மின்சாரம் மூலமாக 1 கிலோஹைட்ரஜன்தயாரிக்கமுடியும். எந்த விதமான கார்பன் உமிழ்வும் இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.வீடு, தொழிற்சாலை என தேவைக்கேற்பட உற்பத்தி செய்துக்கொள்ளலாம்.தீப்பிடிக்காததால்,பாதுகாப்பாஎரிபொருளாகும். வாகனங்களுக்கு நேரடி எரிபொருளாக பயன்படுத்தலாம்.வ.எண் எல்பிஜி (LPG) ஹாங்க் (HONC GAS)
1 பெட்ரோலிய எரிபொருள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
2 எளிதில் தீப்பிடிக்கும் தீப்பிடிக்காது
3 அதிக கார்பன் பூஜியன் கார்பன்
4 ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க 5.36 நிமிடம் ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க 1.32 நிமிடம்இதுகுறித்து விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக் கூறுகையில்,”தற்போது 1 கிலோ ஹைட்ரஜன் தயாரிப்பதற்கு ரூ.450 முதல் ரூ.500 வரை செலவாகும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால், இந்த ஹாங்க் (HONC) கார்பன் (Carbon), இல்லாமல் எரியக்கூடிய எரிபொருள். இதனை மிகக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும். நீரிலிருந்து நெருப்பு என்பதே எனது ஆய்வு. 1 லிட்டர் தண்ணீரில் 1,225 லிட்டர் ஹைட்ரஜன் உள்ளது. இந்த ஹைட்ரஜனை வெடிக்காமல் எரிபொருளாக பயன்படுத்த முடியுமா? என்பதுதான் எனது ஆய்வு.இந்த கண்டுபிடிப்பால் அதிகளவு தண்ணீர் செலவு இல்லை. எனவே, இதனை மத்திய அரசு கையில் எடுத்து விற்பனைக்கு கொண்டுவர வேண்டும். இவற்றை, பேக்கரி, மருத்துவமனை, உணவகம், தொழிற்சாலை ஆகியவற்றில் பயன்படுத்தலாம். குறிப்பாக, திருப்பூர் போன்ற ஜவுளி தொழிற்சாலைகள் ஆண்டுதோறும் பல லட்சம் டன் விறகுகளை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. அதற்கு பதிலாக வெறும் 60 லிட்டர் தண்ணீர் போதுமானது. கசிவு ஏற்படாமல் தடுக்கும் 27 பாதுகாப்பு சென்சார்கள், ரிட்டர்ன் வால்வுகள் போன்ற நவீன பாதுகாப்பு முறைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், இது பாதுகாப்பான எரிபொருளாகும்” என்றார்.
