கோவை:பி.எஸ்.ஜி மேலாண்மை நிறுவனத்தின் நிறுவன தின விழா கல்லூரியில் பயின்ற தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களான முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு!!!

sen reporter
0

பி.எஸ்.ஜி மேலாண்மை நிறுவனம் (PSG IM) தனது 2025 ஆம் ஆண்டின் நிறுவன தின விழா, பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில்நடைபெற்றது.விழாவில், பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலர் மற்றும் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார்.அப்போது பேசிய அவர், பிஎஸ்ஜி தனது நூற்றாண்டு மைல்கல்லை அடையும் இந்தத் தருணத்தில், தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை அணுகி, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளக் கூடிய தலைவர்களை உருவாக்குவது அவசியம்எனஅவர்வலியுறுத்தினார். நிகழ்ச்சியில்,தி இந்து குழுமத்தின் பிசினஸ்லைன் பத்திரிகையின் ஆசிரியர் ரகுவீர் ஸ்ரீநிவாசன் தலைமை விருந்தினராகவும்,, இந்தியப் பல்கலைக்கழக சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் பங்கஜ் மித்தல் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.முன்னதாக விழாவில் பேசிய, ரகுவீர் ஸ்ரீநிவாசன்,, கல்வித் துறையில் நூற்றாண்டாக தொடர்ந்து சேவையாற்றி மதிப்புகளை நிலைநிறுத்தி வரும் பிஎஸ்ஜி & சன்ஸ் உலக அளவில் சாதிக்கும் திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்..


பிஎஸ்ஜி மேலாண்மை நிறுவன மாணவர்கள் அனைவரும் நாட்டிற்கு மதிப்பு சேர்க்கும் நிறுவனங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்..தொடர்ந்து நடைபெற்றவிழாவில்,பி.எஸ்.ஜி.மேலாண்மை நிறுவனத்தில் பயின்ற மாணவர்களும்,பல்வேறு துறைகளில் இந்நாள் சாதனையாளர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.இதில், விகாசா குழுமப் பள்ளிகள்தலைவர்,வேல்சங்கர், ஐடியல் ஸ்டோர்ஸ் தலைமை செயல் அதிகாரி,அட்கா கே. ஸ்ரீஷ், பருத்தி நிலைக்குழு தலைவர்,சக்தி குழும நிறுவனங்கள் இயக்குனர் ராஜ்குமார்,மற்றும் கார்டமம் பிளாண்டர்ஸ் பெடெரேஷன் தலைவர் ஸ்டானி போத்தன்,ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.. விழாவில் கல்வி நிறுவனத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top