தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு!!!

sen reporter
0

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு 2024-2026-ன் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள் (சேலம் மேற்கு), எஸ்.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), ஆகியோர் இன்று (12.09.2025) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.இந்த கள ஆய்வின் போது, திருக்கோவில் வளாகத்திலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு 2024-2026-ன் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது  தமிழ்நாடு அரசு உறுதிமொழிக்குழு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பால பணிகள், தங்கும் விடுதிகள், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கட்டிடம், திருநீறு தயாரிக்கும் கட்டிடம், அலுவலக கட்டிடம், பல்லாயிரகணக்கான பொதுமக்கள் வந்துசெல்வதற்கானநிழற்கூடங்களுடன் கூடிய மண்டபங்கள், உணவருந்தும் கூடங்கள், யானைக்கான ஓய்வு இல்லங்கள் உள்ளிட்ட இங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.கடந்த ஆண்டு, அரசு உறுதிமொழிக்குழு வருகை தந்து பணிகளின் உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து நேரடியாக களத்தில் ஆய்வு செய்தோம். அதேப்போல் இன்றும், கடல் அரிப்புக்காக ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிற பணிகள், சூரசம்ஹாரம் நடைபெறுகின்ற பொழுது இலட்ச கணக்கான மக்கள் கூடுவதற்கு போதிய இடம் இல்லாமல் கடல் அரிப்பின் காரணமாக இடப்பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் முயற்சியில் கடல் பகுதியில் கான்கீரிட் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 


மேலும், ரூ. 32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா எந்த நோக்கத்திற்காக கட்டப்படுகிறதோ அதன் நோக்கம் 3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும். இதன் மூலம் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலை ஏற்படும். மேலும், திருக்கோயில்கள், மசூதிகள், பள்ளிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக இருக்க்க்கூடிய இடங்களில் கூடுதலாக மதுக்கடைகள் திறக்கக்கூடாது என சட்டமன்ற பேரவையில் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். மனமகிழ் மன்றம்,திருகோவில்வளாகங்களுக்குட்பட்ட பகுதிகளில் புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டால், மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பேசி அதற்கு அனுமதி அளிக்காமல், மறுபரிசீலனை செய்து அதற்கான உரிய வழிகாட்டுதல்களை இக்குழு வழங்கும். மேலும், பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளாக தற்பொழுது 41 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக கழிவறைகள் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


எதிர்காலத்தில் பயோ மெட்ரிக் முறையில் நடமாடும் கழிவறைகள் வைப்பதற்கு இக்குழு பரிந்துரை செய்யும். இலட்சகணக்கான பக்தர்கள் வருகை புரிகின்ற திருச்செந்தூர் நகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும், கூடுதலாக நிதி வசதியுடன் முறைப்படுத்துவதற்குமான நடவடிக்கையை அரசு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு 2024-2026-ன் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் தருவை மைதானம் அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் மற்றும் தீயணைப்பு கருவிகளை பார்வையிட்டார். பின்னர் திருச்செந்தூர் சாலை மீளவிட்டான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட Tidel Neo (தொழில்நுட்ப பூங்கா) மற்றும் அதில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனத்தையும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பகுதியில் கடல் உள்வாங்கியுள்ள இடத்தையும், திருக்கோவில் பாடசாலை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குழு துணைச் செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி, சார்பு செயலாளர் த.பியூலஜா உள்ளிட்ட அரசு துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top