சென்னை:என்னை நீக்கியதால் யாருக்கு பாதிப்பு என்பதற்கு காலம் பதில் சொல்லும்! செங்கோட்டையன் பேட்டி!!!

sen reporter
0

தன்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.அதிமுக கட்சியின்அனைத்துப்பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையனை நீக்கிய பிறகு, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த நடவடிக்கை வேதனை அளிக்கவில்லை என்றும், இது கட்சிக்கு பாதிப்பா என்பதை காலம் தான் பதில் சொல்லும் என்றும் தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்குமிடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க இபிஎஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதற்காக 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும், இல்லாவிட்டால் தன்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து அந்த பணியை மேற்கொள்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.இபிஎஸ் அதிரடி நடவடிக்கைசெங்கோட்டையனின் இந்த அறிவிப்புஅதிமுகவில்பெரும்சர்ச்சையைஏற்படுத்தியது.இந்நிலையில்இன்றுசெங்கோட்டையனை அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.காலம் பதில் சொல்லும்தன் மீதான நடவடிக்கைக்குப் பிறகு, செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர், “சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்வதற்கு அதிமுகவில் தடையில்லை என்று அவரே பல மேடைகளில் பேசியிருக்கிறார். ஆனால் இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு காலம் தான் பதில் சொல்லும். என்னை அதிமுக பொறுப்புகளிலிருந்து நீக்குவதற்கு முன்பு எனது பேச்சு குறித்து என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்கியது கட்சிக்கு பாதிப்பா என்பது குறித்து காலம் தான் பதில் சொல்லும்” என்றார்.

அவரிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, “ஏற்கனவே சொன்னதைப் போலவே என் பணி தொடரும்” என்றார். நேற்றைய (செப்.5) பேட்டியில் தனக்கு ஆதரவாளர்கள் நிறைய இருப்பதாகவும், மூத்த அமைச்சர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் கூறியும், யாரும் நேரில் வந்து சந்திக்காதது குறித்து கேட்ட போது, அவர்கள் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள் என்றார்.6 பேர் கொண்ட குழு தன்னை சந்திக்கவில்லை என இபிஎஸ் கூறியது குறித்த கேள்வி எழுப்பியதற்கு, இதுகுறித்து ஏறத்தாழ 8 மாதத்திற்கு முன்பே தெளிவுபடுத்தியிருப்பதாககூறினார்.யார் தான் கருத்தை முன் வைப்பது? கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியது குறித்து கேட்டதற்கு, இதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து இப்போது பேச முடியாது என்றும் தெரிவித்தார். காலக்கெடு வைத்தது குறித்து கேட்டதற்கு, 10 நாட்களுக்குள் இந்த பணியை தொடங்க வேண்டும் என்றும், ஒரு மாத காலம் ஆனாலும் பேசி தீர்க்க வேண்டும் என்று தான் கூறியதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.மேலும் பேசிய செங்கோட்டையன், “யார் தான் இந்த கருத்தை முன் வைப்பது? தொண்டர்களும் பொதுமக்களும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் அவர்களை கட்சியில் இணைக்குமாறு பேசியிருக்கிறார்கள். ஆனால் அது எதற்குமே எந்த நடவடிக்கையும் இல்லை என்ற பட்சத்தில் தான், என் போன்று எம்.ஜி.ஆரால் இயக்கத்தில் இணைக்கப்பட்டவர்கள் இந்த கருத்தை வெளிப்படுத்துவது நல்லது என்று தெரிவித்தேன்”என்றார்.உங்களுடைய கருத்துக்கு டி.டி.வி. தினகரன், சசிகலா வரவேற்பு கொடுத்தது குறித்து கேட்டதற்கு, “அவர்கள் மட்டுமல்ல, நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, பிரேமலதா என நிறைய பேர் கருத்து தெரிவித்தனர். அவர்களுடைய கருத்துகள் நியாயமானவை” என்று பதிலளித்தார்.இதனிடையே, செங்கோட்டையனைபொறுப்பிலிருந்து நீக்கிய கையோடு, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ ஏ.கே செல்வராஜை நியமனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top