லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்திற்குள் நடந்து செல்லும்போது, ஒருவித பிரமிப்பை உணர்ந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!!

sen reporter
0

லண்டனில் படிக்கும் போது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்றுபார்வையிட்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, ஜெர்மனியில் ரூ.7,020 கோடி மதிப்பில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் துறை, செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.அந்த வகையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தின் மூலம் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகியுள்ளதாகவும், இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 17,613 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.லண்டனில் உள்ள அம்பேத்கர்இல்லத்தில்மு.க.ஸ்டாலின் லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் (X / @mkstalin) இதற்கிடையே, லண்டனில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். இது குறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், “லண்டனில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இல்லத்தை பார்வையிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பாபா சாகேப் அம்பேத்கர் லண்டனில் உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் (London School of Economics and Political Science) உயர் கல்வி மையத்தில் படிக்கும் போது இந்த வீட்டில் தான் தங்கியிருந்தார். அங்கு இருந்த அறைகள் வழியாக நடந்து செல்லும் போது, ஒரு ஆழ்ந்த பிரமிப்பை உணர்ந்தேன்.

இதையும் படிங்க: 10 நாட்கள் 'கெடு' விடுத்த செங்கோட்டையனின் பொறுப்புகள் பறிப்பு எடப்பாடி பழனிசாமி அதிரடி இந்தியாவில் சாதி என்ற சங்கிலியால் அடைக்கப்பட்ட ஒரு இளைஞர், தன்னுடைய அறிவு மூலம் உயர்ந்து லண்டனில் மரியாதையை பெற்றது மட்டுமின்றி, இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியாகவும் திகழ்ந்தார். இந்நிலையில், தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் உரையாடல் அடங்கிய வரலாற்று புகைப்படத்தை பார்த்தது என் இதயம் தொட்ட நிகழ்வாக அமைந்துள்ளது. ஊக்கமளிக்கும் இந்த தருணத்தைக் கொடுத்ததற்கு நன்றி, ஜெய்பீம்”என பதிவிட்டுள்ளார்மார்க்ஸ்நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்அதனைத் தொடர்ந்து, லண்டனில் ஹைஜெட் கல்லறைத் தோட்டத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். இது குறித்து, உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கியசிவப்புச்சூரியனாம்மாமேதைகார்ல்மார்க்ஸ்நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன். தத்துவ ஞானிகள் உலகிற்கு பல வழிகளில் ஒரு விஷயத்தை கூறியிருக்கின்றனர். அவர்கள் கூற வரும் ஒரே மையக் கருத்து, இந்த உலகை மாற்ற வேண்டும் என்பது தான்” என பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top