இராமநாதபுரம்: இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானசங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ‘மான்’ இனங்களின் பெயர்!!!

sen reporter
0

சங்கஇலக்கியங்களில்மானைகுறிப்பிடும் பல்வேறுபெயர்களில் தமிழ்நாட்டில் பலஊர்களின்பெயர்அமைந்திருப்பதாக வெளியான ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவி சிவரஞ்சனியின் ஆய்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.மான் எனும் பொதுப் பெயரிலும், இலக்கியங்கள் குறிப்பிடும் பெயரிலும் தமிழ்நாடெங்கும் பரவலாக ஊர்கள் உள்ளதை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளரும், ஆசிரியர்பயிற்சிபெற்றமாணவியுமான பால்கரைவே.சிவரஞ்சனி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.இது குறித்து சிவரஞ்சனி கூறுகையில், “மான் எனும் பொதுப்பெயரில் மானூர், மானுப்பட்டி, மான்கானூர், மன்கரட்டுப்பாளையம், மாங்குளம், மாஞ்சேரி, மாங்காடு, மான்குண்டு என 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளது போல், மான் இனத்தின் வகைகளை குறிப்பிடும் பெயர்களிலும் உள்ளன.

தமிழ்இலக்கியங்களில்குறிப்பிடப்படும் மானின் கொம்புகளை கொண்டு அவற்றை இரலை, கலை என இரு இனமாகப் பகுப்பர். இரலை இனத்தின் கொம்புகள் உள்துளை, கிளைகள் இன்றி கெட்டியாக இருக்கும். கீழே விழுந்தால் புதிய கொம்பு முளைக்காது.உள்துளையுடன் கிளைகள் கொண்ட கலை இனத்தின் கொம்பு, குறிப்பிட்ட கால வெளியில் கீழே விழுந்து புதிதாக முளைக்கும். இரலை இனத்தில் இரலை, நவ்வி, மரையான் எனவும், கலை இனத்தில் உழை, கடமான் ஆகிய வகைகளும் உள்ளன. இதன் பெயர்களில் தமிழ்நாடெங்கும் ஊர்கள் காணப்படுகின்றன.கொம்புடன், கருமையான உடல் கொண்ட இரலையின் ஆண் மானை தேவாரம் ‘கருமான்’ என்கிறது. இந்த பெயரில் கார்மாங்குடி, கருமங்காடு, கருமாங்குளம், கருமாபாளையம், கருமஞ்சிறை, கருமாபுரம், கருமாந்துறை, கருமனூர் என்று பல ஊர்கள் உள்ளன.முறுக்கிய கொம்புகளால் ஆன இந்த வகை மானை முறுக்குமான் எனவும், புல்வெளிகளில் வாழ்வதால் புல்வாய் எனவும் அழைத்தனர். முறுக்கோடை, முருக்கம்பட்டு, முருக்கம்பாடி, முருக்கன்குட்டை, முருக்கன்பாறை, புல்வாய்க்குளம், புல்வாய்க்கரை, புல்வாய்பட்டி போன்ற பெயர்களில் ஊர்கள் உள்ளன. நவ்வி மான் பெயரில் ஊர்கள் காணப்படவில்லை. பசுவை போல் இருப்பதால் மரையான் எனப்படும் வகை மானின் பெயரில் மரைக்குளம், மரையூர், மறைநாடு போன்ற ஊர்கள் உள்ளன.

கலை இனத்தில், கிளையுள்ள கொம்புகளுடன் இருக்கும் உழைமானின் உடலில் புள்ளிகள் காணப்படுவதால் இதை கலைமான், புள்ளிமான் எனவும் அழைப்பர். கலைக்குறிச்சிவயல், கலைகுடிபட்டி, கலையன்விளாகம், கலையனூர், கலையூர், கலைக்குளம், உழையூர், உழக்குடி, புள்ளிமான் கோம்பை, புலிமான்குளம் என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. கிளையுள்ள கொம்புடன், உடலில் புள்ளி இல்லாத கடமான் பெயரில் கடமான்குளம், கடமாகுட்டை, கடமனூர், கடமான் கொல்லை, கடமாங்குடி, கடமஞ்சேரி, கடத்திக்குட்டை போன்ற பல ஊர்களின் பெயர்கள்உள்ளன.சுமார்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சங்க இலக்கியங்களில்குறிப்பிடப்படும் மான் இனங்களின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஊர்கள் அமைந்திருப்பது தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சிக்கு சான்றாக உள்ளது” என்று கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top