ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (DIET) போன்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆசிரியர்கள் கற்றுக் கொண்ட யுக்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். புதுப்புது கற்பித்தல் நுட்பங்களை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல் கல்வியை வழங்க வேண்டும்.தேர்வில் மட்டுமல்ல, வாழ்விலும் வெற்றி பெற வேண்டும்ஒரு மனிதனின் வெற்றிக்கு காரணம், அவரது மனநிலையே. அதேபோல் ஆசிரியர்களும் நல்ல மனநிலையோடு மாணவர்களை உயர்த்த வேண்டும். மாணவர்கள் வாழ்வில் சாதனை படைக்கவும், உலகளவில்நம்மைபெருமைப்படுத்தவும் வழிகாட்ட வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது முன்எப்போதும் இல்லாத வகையில்அதிகரித்துள்ளது.மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் பணியில் ஆசிரியர்கள் முன்னோடியாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவனின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரது சமூகத்தையும் மாற்றக்கூடிய ஆற்றலாளர்கள். கல்வி என்பது வெறும் பாட நெறியல்ல, அது வாழ்வை மாற்றும் சக்தி. கல்வி ஒரு ஆயுதம், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
வேலூர்; மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் பணியில் ஆசிரியர்கள் முன்னோடியாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்!!!
9/20/2025
0
SLAS ஆய்வறிக்கையை முன் வைத்து வேலூர் மாவட்டப் பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டம் பள்ளிகொண்டா பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க, மாணவர்களுக்கு அறிவார்ந்த கற்றல் திறன்கள் வழங்கப்பட வேண்டியது ஆசிரியர்களின் முதல் பணி. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மட்டுமே கல்வி பயன்படுவதாக யாரும் நினைக்கக் கூடாது. வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் நிற்கவும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் கல்வியே அடித்தளம்" என்றார்.உச்ச நீதிமன்றத்தால் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் 'ஆசிரியர் தகுதி தேர்வு' கட்டாயமக்கப்பட்டுள்ளது பற்றி பேசிய அவர், "தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை. தேர்வுகள் குறித்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்களின் கனவுகளை நனவாக்கி அவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
