மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும். சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.மாணவர்களிடம்ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம். மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள். பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர் என்று கூறினார்.
சென்னை: தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்!!!
9/20/2025
0
சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பங்கேற்று243புதியபள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார்ஆசிரியர்தேர்வுவாரியம்மூலம்தேர்வாக2,715ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது: மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள்ஆனால்ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி. ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.
