கோவை மாவட்ட தடகள சங்கம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை ,எஸ்பிடி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, நடத்திய இந்நிகழ்ச்சியில் எண் 4 பட்டாலியன் டிஎஸ்பி செந்தில் குமார் மற்றும் காவல்துறை துணை ஆணையர் அசோக்குமார்ஆகியோர்கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து வாக், ஜாக், ரன்முறையில்நடைபயணத்துடன் கூடிய 5 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது.இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாரடைப்பை தடுப்போம், உடல் நலம் காப்போம் , உயிர்காப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..
கோவையில் இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு பல்ஸ் ஹார்ட்டத்தான்ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு!!!
9/21/2025
0
கோவையில் நடைபெற்ற இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு ஹார்ட்டத்தான் எனும் வாக்,ஜாக்,ரன் போட்டியில்ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் பங்கேற்றனர்.இருதயம் தொடர்பான நோய்கள்உலகம்முழுவதும்அதிகரித்து வரும்நிலையில்,குறிப்பாகஇளைஞர்கள் இருதய பிரச்சனையால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதுஅதிகரித்துவருகிறது. இத்தகைய இருதயத்தை சீராக வைத்துகொள்ள உடற்பயிற்சி,சரியான உணவுமுறைகள்அவசியம்,புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும், என்பதை வலியுறுத்தும் விதமாகவும் 30 முதல் 40 வயதில் வரும் மாரடைப்பு பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்ஸ் ஹார்ட்டத்தான் நிகழ்ச்சி கோவை ராம் நகர் பகுதியில் நடைபெற்றது.
