சிகிச்சை சார்ந்த சுகாதாரத் துறையில் – தினசரி ரூ.5000-க்கு குறைவான மருத்துவமனை அறை வாடகைகள் GST விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நடுத்தர மற்றும் தாழ்வுவர்க்கக் குடும்பங்கள் பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. கூடுதலாக ICU, CCU, ICCU, NICU போன்ற முக்கிய சிகிச்சைப் பிரிவுகளும் GST-இல் இருந்துமுழுமையாகவிலக்கப்பட்டுள்ளன. உயிர் காப்பாற்றும் சிகிச்சைகள் முழுவதும் வரி விலக்கு பெறுகின்றன; ரூ.5000-க்கு மேல் செலவாகும் பிரீமியம் வகைஅறைகள்மட்டும்GSTகட்டணத்துக்குட்படுகின்றன.மருந்துகள்தொடர்பாகமத்தியஅரசுபெரும்பாலான மருந்துகளின் GST-ஐ 5% ஆகக் குறைத்துள்ளது. 32 உயிர் காப்பாற்றும் மருந்துகள் முற்றிலும் வரிவிலக்கு பெறுகின்றன. இதனால் அவற்றின் விலை மலிவாகிறது. இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, MRI, CT scan போன்ற ஆய்வக பரிசோதனைகளும் தற்போது 5% GST-இல் வருகிறன (முன்பு 12% மற்றும் 18% கட்டண வரம்பில் இருந்தன).சுகாதாரத் துறையிலும் முன்னெச்சரிக்கை – GST 2.0 சீர்திருத்தங்கள் பரவலாக விரிந்துள்ளன. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், சலூன்கள், ஹேர் கட் கடைகள், நலன்புரி சேவைகள் ஆகியவற்றின் வரி விகிதம் 18%-இல் இருந்து5%ஆகக்குறைக்கப்பட்டுள்ளது. இது “பிட் இந்தியா இயக்கம்”-க்கு வலுசேர்க்கிறது.அதேபோல், காரம் கலந்த, இனிப்புச் சேர்க்கப்பட்ட அல்லது சுவையூட்டப்பட்ட பானங்கள், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் 28% வரியுடன்வரிவிதிக்கப்பட்டிருந்தன. இவை தற்போது 40% (பாவச்சீட்டு விகிதம்) வரை உயர்த்தப்பட்டுள்ளன. இது ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தியர்களிடையே புற்றுநோய் (வாய் & நுரையீரல்) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றாத நோய்களை குணப்படுத்தும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் மனித ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது
காப்பீட்டில் இருந்து ஜிஎஸ்டியை நீக்கி, உயிர் காக்கும் மருந்துகளின் செலவை குறைத்து, உபகரணங்களுக்கான வரிகளை எளிமைப்படுத்தி, தடுப்பு சேவைகளின் வரியைக் குறைத்து, மத்திய அரசு முழு சுகாதாரத் துறையையும் ஆதரிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மத்திய அரசால் கற்பனை செய்யப்பட்டுள்ள இவ்வகை ‘ஜிஎஸ்டி 2.0’ அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள், நாட்டின் சுகாதார நிதியை 2047 ‘விக்சித் பாரத்’ இலக்குடன் இணைந்து மறுசீரமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், எஸ்.டி.ஜி இலக்கு எண் 03 ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நலநிலை’ என்பதையும் 2047க்குள் ‘சுவஸ்த் பாரத்’ என்ற இலக்கை அடையவும், நாட்டை இளம் மற்றும் உற்சாகமான ஒன்றாக மாற்றவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
