அப்போது ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல் பேரூராட்சி அலுவலக கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கியதோடு, இருக்கைகளையும் சேதப்படுத்தினர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் 2 மட்டுமே வெடித்தன. வெடிக்காத மற்றொரு பெட்ரோல் குண்டை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த கும்பல் உடனடியாக வந்த காரில் தப்பி ஓடி விட்டது.பேரூராட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் ம.க.ஸ்டாலினின் ஆதரவாளரான அருண்குமார் படுகாயம் அடைந்தார். மேலும், அந்த கும்பல் அரிவாளால் வெட்டியதில் இளையராஜா என்பவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர்கள் இருவரும்ஆடுதுறையில்உள்ளதனியார்மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டுதீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக, திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜீ மற்றும் திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.மேலும், இது குறித்து கேள்விபட்டவுடன் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகம் முன் குவிந்த பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதனிடையே, ஆடுதுறை பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவில், கார் ஒன்றில் சிலர் வந்து அலுவலகம் முன்பு இறங்குவதும், பின்னர் தாக்குதல் நடத்திய பிறகு அதே காரில் தப்பியோடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதனை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:பட்டப்பகலில் பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி பேரூராட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!!!
9/05/2025
0
காரில் முகமுடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ம.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினை 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் அருகே ஆடுதுறையில் பேரூராட்சி தலைவராக இருப்பவர் ம.க.ஸ்டாலின். இவர் பாமக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில், இன்று பிற்பகல் இவர் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் தனது அறையில் சிலருடன் பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது, காரில் முகமுடி அணிந்து வந்த ஒரு கும்பல், பேரூராட்சி அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசி, ம.க.ஸ்டாலினை அரிவாளால் வெட்ட முயன்றது. அப்போது சுதாரித்துக் கொண்ட ம.க.ஸ்டாலின் பின்பக்கமாக தப்பியோடி உயிர் தப்பினார்.
