நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும் போது, ''ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறம் சார்ந்த கல்வியை கற்பித்து வருகின்றனர். ஆசிரியர்கள் 4 நாட்களாக குழந்தையை தொலைத்த பிள்ளை போல் தவித்து வருகின்றனர். கவலைப்படாதீர்கள் தொலைந்து போன குழந்தை மீண்டும் கிடைக்கும். தமிழ்நாட்டை பார்த்து கர்நாடகா நேற்று மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளனர்''எனதெரிவித்தார்.நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ''அனைவருக்கும் முதலில் ஆசிரியர் தின வாழ்த்துகள். கடந்த ஆண்டு ஆசிரியர் தினத்திற்கு அழைப்பு கொடுத்து இருந்த போது பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வைத்து இருந்தார்.இதில் அதிகப்படியான கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். மீதமுள்ள கோரிக்கைகளையும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிறைவேற்றி தருவார். ஆசிரியர்களுக்கு எல்லாம் சிறந்த ஆசிரியர்கள். உங்கள் முன் பேசும்போது அளந்து பார்த்து எச்சரிக்கையாக பேச வேண்டும். இல்லையென்றால் பெயில் மார்க் போட்டு விடுவீர்கள்.ஒரு காலத்தில் கிராமத்திற்கு போனால் இது தான் வாத்தியார் வீடு என்று சொல்வார்கள். ஆனால் தற்போது கிராமத்திற்கு போனால் இது டாக்டர் வீடு, வழக்கறிஞர் வீடு என்று சொல்கிறார்கள். அந்த அளவிற்கு கல்வி கிராமப்புறத்திற்கு சென்று சேர்ந்துள்ளது. அதற்குக் காரணம் ஆசிரியர்கள் தான்.தமிழ்நாட்டில் எந்நாளும் மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க முடியாது. இரு மொழி கொள்கையே போதும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். காலை உணவு உள்ளிட்ட அனைத்து சிறப்பு திட்டங்களுக்கும் காரணம் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் கடந்த தேர்தலில் ஆதரவு அளித்தது போல் வரும் தேர்தலிலும் அதைவிட அதிக அளவில் ஆதரவு அளிக்க வேண்டும்.ஒரே ஒரு வேண்டுகோள். விளையாட்டு துறை அமைச்சராக கேட்டுக் கொள்கிறேன். உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி வகுப்பு எடுக்காதீர்கள். பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளையாட்டு துறையில் தான் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற உள்ளார்.எனவே ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்காதீர்கள். திருவள்ளூர் மாவட்டத்தில்டாக்டர்ராதாகிருஷ்ணனுக்கு திருவுருவ சிலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். அதனை முதலமைச்சர் திறந்து வைப்பார்'' என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை:கடந்த தேர்தலை விட அதிகளவில் ஆசிரியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
9/05/2025
0
காலை உணவு உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெற ஆசிரியர்கள் தான் காரணம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.கடந்த தேர்தலில் ஆதரவு அளித்தது போல் வரும் தேர்தலிலும் அதை விட அதிகளவில் ஆசிரியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளி கல்வித் துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 395 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு செய்தார். மேலும் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மேலும் பள்ளி கல்வித் துறை, ஆதிதிராவிட நலத்துறையில் 2810 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 40 பேருக்கு மேடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
