முன்னதாக விழாவில் பேசிய அவர், மாணவர்கள் விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் சிறந்து விளங்க வேண்டும் என்றும், கல்வி மட்டுமே ஒருவரை சிறந்த மனிதனாகவும், சமூகத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் வலியுறுத்தினார்.ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர்,அத்தகைய கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என அவர் கூறினார்.விழாவில் கோவை மாவட்டத்தின் தலைமைக் கல்வி ஒருங்கிணைப்பாளர்சுபாஷ்மாணவர்களின்வெற்றியைவளர்ப்பதிலும், வழிகாட்டுவதலும்,ஆதரவுஅமைப்புகளின்இன்றியமையாதபங்கைஎடுத்துரைத்தார்.தொடர்ந்து ஆசிரியர் சேவைக்காக 160 கல்வியாளர்களுக்கு ஆச்சார்யா விருது வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கலைவாணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பிருந்தா, ஒருங்கிணைப்பாளர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்..
