சென்னை:ஜி.எஸ்.டி. குறைப்பு தொடர்பான பிரதமர் மோடியின் இனிப்பு பேச்சை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

sen reporter
0

இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ்தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டியநிதிமறுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஜி.எஸ்.டி.குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்எதிர்ப்புதெரிவித்துள்ளார்.ஜி.எஸ்.டி. குறைப்பு தொடர்பாக பிரதமரின் பேச்சு தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜி.எஸ்.டி. குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதை தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளானநாங்கள்வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயைஎப்போதோசேமித்திருக்குமே?மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக் குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்து தான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன் நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்" எனஅந்தபதிவில்தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் வகையில் ஜிஎஸ்டிஎனப்படும்சரக்குமற்றும்சேவைவரிஅமலுக்குகொண்டுவரப்பட்டது. இதில் 5, 12, 18, 28ஆகிய4அடுக்குகளின் கீழ் வரிகள் விதிக்கப்பட்டன. ஜிஎஸ்டி விதிப்பால் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இருப்பினும் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரியானது அமலில் இருந்தது. இந்நிலையில், சுதந்திர தின உரையில், நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டியில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் பிரதமர் மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, என்னென்ன பொருட்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன, எந்தெந்த பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படுகின்றன என்பது குறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 4-ம் தேதியன்று வெளியிட்டார்.அதன்படி, 4 அடுக்கு வரியானது 2 அடுக்காக குறைக்கப்பட்டு 5% மற்றும் 18% என இரண்டுஅடுக்காகமாற்றப்பட்டடிருப்பதாக அறிவித்தார். அதே சமயம் உயர் ரக கார்கள், புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களுக்கு சிறப்பு பிரிவின்கீழ் 40% வரி விதிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இந்த வரி சீர்திருத்தமானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் இனிப்பு என நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top